2025 ஜூலை 19, சனிக்கிழமை

மனைவிக்கு சாதகமாக நடந்தார் என்று முறைப்பாடு

Gavitha   / 2016 ஜனவரி 10 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

தனது மனைவிக்கு மாத்திரம் சாதகமான முறையில் நடந்து கொண்டார் என்று தெரிவித்து, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள பெண் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவருக்கு எதிராக, நபரொருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண கிளைக் காரியாலயத்தில், சனிக்கிழமை (09) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலோலி மேற்கு பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் செந்தூரன் என்ற நபரே இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

முறைப்பாடு செய்த நபருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் சில நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பில், குறித்த நபரின் மனைவி, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டையடுத்து ஒழுங்கான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாத பெண் உத்தியோகத்தர், அடிக்கடி பொலிஸ் நிலையத்துக்கு தன்னை வரவழைத்து காரணம் எதுவும் இன்றி தடுத்து வைப்பதுடன், விசாரணைகள் எதுவுமின்றி தன்னை மறுநாள் விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தன் மனைவிக்கு சாதகமாக நடந்து கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X