2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திய கணவன் கைது

Menaka Mookandi   / 2016 மார்ச் 17 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தியதுடன், மனைவியின் தலைமுடியையும் வெட்டி வீசிய கணவனொருவரை, 3 மாதங்களில் பின்னர், அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், புதன்கிழமை (16) இரவு கைது செய்தனர்.

வல்வெட்டித்துறை பகுதியினை சேர்ந்த மேற்படி சந்தேகநபர், உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையில் சிலகாலமாக கருத்து முரண்பாடு நிலவி வந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த  மனைவியை, வல்வையில் வைத்து பஸ்ஸை மறித்து கீழே இறக்கி, சண்டையிட்டுள்ள மேற்படி நபர், தான் மறைத்து வைத்த கத்தியை எடுத்து மனைவியின் மர்ம உறுப்பில் குத்தியதுடன், அவரின் தலைமுடியையும் அறுத்துள்ளார்.

வீதியில் சென்றவர்களால் காப்பற்றப்பட்ட மேற்படி பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கணவன் தலைமறைவாகியிருந்த நிலையில், நெல்லியடி மூத்தனார் கோயில் பகுதியில் வைத்து 3 மாதங்களின் பின்னர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X