Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
ஊடகங்களின் வெளியான தவறான செய்தியால், தாம் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளகியுள்ளதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில், வெளியான செய்தியால் தம் மீது அவதூறு ஏற்பட்டு உள்ளததெனத் தெரிவித்து, அவ்வைத்தியசாலை தாதியர்கள் இன்று (05) பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது குறித்து தொடர்துரைத்த அவர்கள், யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்கெனவே பல குறைப்பாடுகள் காணப்படுகின்றனவெனவும் இந்நிலையில் இவ்வாறான செய்திகள் வெளி வந்துள்ளதால் தாதியர் சேவைக்கு வர விரும்புவோர்கள் தயக்கம் காட்டுவார்களெனவும் குறிப்பிட்டனர்.
அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால், அது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தப்பட வேண்டும் என்பதில் தமக்கு மாற்று கருத்தில்லையென, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .