Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 மார்ச் 04 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் திருக்கேதீஸ்வர சம்பவத்தைக் கண்டித்து மன்னார் மாவட்ட சர்வமத பேரவையில் இருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேறுவதாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் அறிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பணி நேற்று (03) இடம்பெற்ற போது இருமதத்தினருக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடுகளைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) மன்னார் பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளனர்.
பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த குறித்த வளைவு துருப்பிடித்திருந்த நிலையில் அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை ஈடுபட்டிருந்தனர்.
எனினும் அப்பகுதிக்கு வந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குள் உள் நுழையும் வளைவுகள் முழுவதையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதன்போது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் உட்பட பலர் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது புதிதாக வளைவை அமைக்கவிடாது அதனையும் உடைத்துள்ளனர்.
இந்தநிலையில் மன்னார் பொலிஸார் வருகை தந்து இரு தரப்பினருடனும் கலந்துடையாடிய நிலையில், மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை (4) மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் மாவட்ட சர்வமத பேரவையில் இருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேறுவதாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் அறிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவு மாற்று மத மக்களால் பிடுங்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் சைவத்தமிழ் மக்களுக்கு தாங்கொணா கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முழு முதற்கடவுள் சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி சம்பவம் எமக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றது.
எம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையில் இருந்து செயற்பட விருப்பமில்லாத காரணத்தால் இந்துக்குருமார் பேரவை அதிலிருந்து வெளியேறிக் கொள்ளுகின்றோம் என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
50 minute ago