2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மயானத்துக்கு செல்ல இலகு வழியை ஏற்படுத்த வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கீரிமலை இந்து மயானத்துக்கு சடலங்களை தகனம் செய்ய செல்லும் போது, கடற்படையினரிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, மயானத்துக்கு இலகுவாக சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீரிமலைப் பகுதி மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மயானத்துக்குச் செல்லும் வீதி கடற்படையினர் வசமுள்ளதால், அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே சடலங்களை மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாக அவர்கள் கூறினர்.

அதற்குப் பதிலளித்த இணைத்தலைவர்களில் ஒருவரான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,

கடற்படையினருடன் கதைத்து, மயானத்துக்கு இலகுவாகச் சென்று வருவதற்கு அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X