2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மயூராபதி அம்மன் நலன்புரிச் சங்கத்தின் வடக்கு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள்

Princiya Dixci   / 2017 மார்ச் 02 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட குறைந்த வசதிகளுடன் கூடிய பாடசாலைகளைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு 'நணதிரிய' வேலைத்திட்டத்தின் கீழ், புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, மயூராபதி அம்மன் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

பிரதமர் அலுவலகத்தின் கோரிக்கைக்கமைவான இவ் வேலைத்திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் தரம் 05 இலிருந்து தரம் 09 வரையான வகுப்புகளில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

மாணவரொருவருக்கு மாதாந்தம் தலா 1000 ரூபாய் வீதம் தொடர்ச்சியாக 03 ஆண்டுகளுக்கு வழங்கப்படுவதோடு, மயூராபதி நலன்புரிச் சங்கத்தின் பொறுப்பாளரான சுந்தரலிங்கத்தின் வழிகாட்டலின் பேரில், 18 மில்லியன் ரூபாய் தொகை அதற்காக சங்க உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந் நிகழ்வில், வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் சந்திராணி சேனாரத்ன, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X