2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மயிலிட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2016 ஜூன் 27 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 25 வருடகாலமாக, தங்களது நிலத்தை ஆக்கிரமித்து வரும் இராணுவம், தங்களது காணிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள், இன்று திங்கட்கிழமை (27) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நல்லூர் ஆலய முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

'பகுதி, பகுதியாக காணிகளை விடுவிப்பதாகக் கூறி எம்மை ஏமாற்றுவதை நிறுத்தி, எமது காணிகளை முழுமையாக எமக்கு தரவும், உலகுக்கு ஒழி வீசும் ஐ.நா.வே, எமக்கு ஒரு நீதி கொடு‚, இனியும் கால அவகாசம் தரமுடியாது, நம்பவைத்து ஏமாற்றாதே‚, தெற்குக்கு ஒரு சட்டம் வடக்குக்கு ஒரு சட்டம் போடாதே‚, முகாம் வாழ்க்கை இனியும் வேண்டாம், எமது நிலம் எமக்கு வேண்டும்' என்ற கோஷங்களை எழுப்பியவாறு, பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, கோவில் வீதியில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திடமும் வடக்கு மாகாண ஆளுநரிடத்திலும், யாழ். மாவட்ட செயலாளரிடமும், மேற்படி மக்களின்  கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்த போதும்,  ஆர்ப்பாட்டத்தின் இறுதிவரை வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் மட்டும் தனது பங்களிப்பை வழங்கிருந்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில், காணாமற்போனோரின் உறவினர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.  இதேவேளை,மக்களின் நிலத்தை மீட்டெடுக்க மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அரசியல் சாயம் கலப்பதற்கு இடமளிக்க முடியாது என தெரிவித்த மக்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் ஆகியோரின் படம் பொறிக்கபட்ட பதாகையினை புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X