Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 மார்ச் 14 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட மயிலிட்டி பகுதியில் உள்ள வீடொன்றின் அத்திபாரத்தின் கீழிருந்து இரண்டு கண்ணிவெடிகள் மற்றும் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டு உள்ளன.
பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் மயிலிட்டி பகுதியில் மீள்குடியேறி தமது வீட்டில் வசித்து வருபவர்கள், வீட்டினை சுற்றி முன்னர் இருந்த மதில் இடித்தழிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீள அமைக்கும் பணிக்காக நேற்று (13) புதன்கிழமை, ஏற்கனவே இருந்த மதில் அத்திபாரத்தை தோண்டிய போது, இரண்டு கண்ணிவெடிகளும், சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டன.
அதனை அடுத்து வீட்டு உரிமையாளர் கிராம சேவையாளரூடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த பகுதிகள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிய நிலையிலும் அப்பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago