2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மருதங்கேணி மக்களை சந்தித்து ஆதரவு

George   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில், காணாமற் போன உறவினர்களை மீட்டுத்தரக்கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் அவர்களுடைய உறவினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் உறவினர்களை ஞாயிற்றுக்கிழமை (02) சந்தித்து ஆதரவு வழங்கியுள்ளனர்.

“காணாமற்போனவர்கள் தொடர்பில் இந்த அரசாங்கம் இதுவரைகாலமும் எந்த பதிலையும் வழங்காது இழுத்தடித்து வருகின்றது. இனியும் காலம் தாழ்த்தாமல் எங்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற பதிலை இந்த அரசாங்கம் தரவேண்டும்” என, உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .