2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மருந்தகத்துக்கு சீல் வைக்குமாறு உத்தரவு

Administrator   / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்  

காலாவதியான மருந்து விற்பனை செய்த மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள மருந்தகமொன்றை சீல் வைத்து மூடுமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (31) உத்தரவிட்டார்.  

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரிகள், கடந்த வாரம் யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள மருந்தகங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், மேற்படி மருந்தகத்தின் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.  

அதனையடுத்து, மருந்தகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதன் உரிமையாளருக்கு 9,000 ஆயிரம் ரூபாய் அபராதம், வெள்ளிக்கிழமை (28) விதிக்கப்பட்டது.  

மருந்தகம் தொடர்பான அறிக்கையினை மன்றில் திங்கட்கிழமை (31) சமர்ப்பிக்க வேண்டும் என, அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் தனசேகரம் வசந்தசேகரத்துக்கு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார். அதற்கிணங்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, அதனைப் பார்வையிட்ட நீதவான், மருந்தகத்தை சீல் வைத்து மூடுவதற்கு கட்டளை பிறப்பித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X