2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மரக்கன்றுகள் நாட்டிய கணக்கு காட்டிய விவசாய அமைச்சர்

Niroshini   / 2016 மே 10 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“வடமாகாணத்தில் 4 இலட்சத்து 81 ஆயிரத்து 857 பனம் விதைகளும், 1 இலட்சத்து 54 ஆயிரத்து 333 பயன்தரும் மரங்களும் நாட்டப்பட்டுள்ளன” என வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வடமாகாண விவசாய அமைச்சால் நாட்டப்பட்ட மரங்களின் செலவு விபரங்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா கடந்த அமர்வில் விவசாய அமைச்சரவை கோரியிருந்தார்.

அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற வடமாகாண சபை மாதாந்த அமர்வில் விவசாய அமைச்சர் பதிலளித்தார்.

“5 இலட்சம் மரக்கன்றுகள் நடுதல் திட்டம் எமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டது. 1 இலட்சம் பயன்தரு மரங்களும், 4 இலட்சம் பனம் விதைகளும் நாட்டுதல் என தீர்மானிக்கப்பட்டது. இருந்தும், தாவர உற்பத்தியாளர் சங்கம், தென்னை அபிவிருத்தி சபை, அன்பே சிவம் அமைப்பு, பனை அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் ஆதரவு கிடைத்து, 4 இலட்சத்து 81 ஆயிரத்து 857 பனம் விதைகளும், 1 இலட்சத்து 54 ஆயிரத்து 333 பயன்தரு மரங்களும் நாட்டப்பட்டன. அனைத்து பனம் விதைகளையும் பனை அபிவிருத்திச் சபை தந்தது'

'நாட்டப்பட்ட பயன்தரு மரங்களில் 16 ஆயிரத்து 145 மரங்கள் விவசாய அமைச்சால் நாட்டப்பட்டது. ஒரு மரத்துக்கு 50 ரூபாய் செலவு செய்யப்பட்டது. இதனைவிட, தலா 1,200 ரூபாய் செலவில் 133 உவர் நீர்க்கன்றுகளும் அமைச்சால் நாட்டப்பட்டது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X