2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மரக் குற்றிகள் கடத்தலில் பிரதேச செயலகத்துக்கு தொடர்பில்லை

Editorial   / 2022 ஜனவரி 16 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

யாழ். புங்குடுதீவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட பனை மரக் குற்றிகளுக்கும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாதென வேலணை பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புங்குடுதீவில் இருந்து 09 பனை மரங்களில் இருந்து 55 சீவிய மரத் துண்டுகளை ஏற்றுவதற்காக பிரதேச செயலகத்தால் அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், அதற்கு மேலதிகமாக பல பனை மரத் துண்டுகள் ஏற்றப்பட்ட நிலையில் லொறி ஒன்று, பொலிஸாரால் சோதனையிடப்பட்டு, அதில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவத்துடன் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவையாளருக்கு தொடர்பு இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அனுமதிக் கடிதத்தை மீறி, அளவுக்கு அதிகமான மரக் குற்றிகளை ஏற்றியமை உறுதிசெய்யப்பட்ட நிலையில், எம்மால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தை  பொலிஸாரிடம் தெளிவுபடுத்தியுள்ளேன்.

ஆகவே, பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் மேற்படி கடத்தலுக்கும்  தொடர்பு இல்லை என்பதை கூறிக் கொள்வதோடு, சம்பந்தப்பட்டிருந்தால் பொலிஸ் விசாரணைகளில் தெரியவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X