2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை முன்றலில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 11 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (11) 2 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

குறித்த வைத்திய சாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்சியாக  24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும். ஆனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் வேறு வைத்தியசாலையில் பணியாற்றிவிட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் எமது வைத்தியசாலையில் சேவையாற்ற வேண்டும் என தெரிவித்து அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை முன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நேற்று (10)  ஞாயிற்றுக்கிழமை  ஆரம்பித்தனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில் இன்று (11) திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X