2025 மே 03, சனிக்கிழமை

மருதனார்மடம் கொவிட்-19 தொற்று: 50ஐத் தாண்டியது

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- என். ராஜ்

யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரிடம் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் மேலும் ஒன்பது பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட 114 வியாபாரிகளின் மாதிரிகளில், 13  வியாபாரிகளுக்கு தொற்றுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

உடுவிலைச் சேர்ந்த ஆறு பேரும், தெல்லிப்பழையைச் சேர்ந்த மூன்று பேரும், நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த தலா இரண்டு பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன்மூலம் மருதனார்மடம் கொவிட்-19 பரவல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X