2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மலசலக்கூட கிடங்களிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

Gavitha   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் .என். நிபோஜன்

கிளிநொச்சி பரந்தம் பகுதியிலுள்ள மலசலக்கூட கிடங்களிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (29) ஒரு  தொகுதி வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டள்ளன.

பரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றின் சுத்திகரிப்பு வேலைகள் நடைபெற்று  கொண்டிருக்கும் போது, அவர்களது மலசலக் கூடத்தை சுத்திகரிக்கையில் மலசல கூட  கிடங்கில் இந்த வெடிபொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இடத்துக்கு வந்த இராணுவ வெடிபொருட்கள் செயலிழக்கும் பிரிவினர், மலசல கூட கிடங்கில்   பாவனைக்கு உதவாத நிலையில் இருந்த மிதிவெடிகள், எல்எம்ஜி துப்பாக்கி ரவைகள், எல்எம்ஜி மகசீன்கள், எல்எம்ஜி துப்பாக்கி பாகங்கள்  மற்றும் பிகே பாகங்கள், மோட்டார்  செல்கள் பற்றிகள், ஏகே மகசீன்கள், ஆர்விஜி செல் பாகங்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X