2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மாணவனை காணவில்லை

Princiya Dixci   / 2022 மார்ச் 29 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் ஒருவர், வீட்டை விட்டுவெளியேறி கடந்த 10 நாள்களுக்கு மேலாக காணாத நிலையில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் உண்ணாப்புலவு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய கே.சானுயன் என்ற மாணவனே, 17.03.2022 அன்று மாலை நேர கல்விக்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதுவரையும் மாணவன், வீடு திரும்பாத நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களால் நேற்று (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மாணவனை அறிந்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 0775690671 கையடக்கத் தொலைபேசி இலகத்துக்கோ அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் கடந்த காலங்களில் பதிவாகி வருவதாகவும் மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் முல்லைத்தீவு பொலிஸார் கேட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X