2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவக வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு உரிய முறையில் முகச்சவரம் செய்யாது சென்றார் என பாடசாலை அதிபரால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.

அந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனால் பொலிஸ் நிலையத்தில் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றாலே உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க அனுமதிப்போம் என வலய கல்வித் திணைக்கள அதிகாரிகள் மாணவனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அத்துடன் தற்போது பாடசாலையில் நடைபெற்று வரும் முன்னோடி பரீட்சையிலும் மாணவனைத் தோற்ற அனுமதிக்கவில்லை.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் .மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X