2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாணவர் தினமும் ஒன்றுகூடலும்

Editorial   / 2017 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் அனைத்துலக மாணவர் தினமும் அவர்களது ஒன்றுகூடலும், செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.  

கல்லூரியின் இலங்கையின் பழைய மாணவர் அமைப்புடன் இணைந்து உலக நாடுகள் பலவற்றிலும் இயங்கும் பழைய மாணவர் சங்கக் கிளைகளும் ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. 

இதையொட்டி, பருத்தித்துறை - ஆத்தியடி பிள்ளையார் ஆலயம் முன்பாகப் பொங்கல் பொங்கி நட்புறவு மற்றும் பாரம்பரிய கலாசார விளையாட்டுகளுடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

அத்துடன், கல்லூரியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்வதற்காக பழைய மாணவர்கள் பங்கு பற்றும் ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் என்பனவும் இடம்பெறும். 

இதேவேளை, எதிர்வரும் 08ஆம் திகதி மேற்படி கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூன்று மாடிக் கட்டிடத்தையும், அதிபருக்கான புதிய வாசஸ்தலத்தையும் அன்றைய தினம் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் திறந்து வைக்கவுள்ளதாக, கல்லூரியின் கொழும்புக் கிளையின் பழைய மாணவர் சங்கத் தலைவர் சட்டத்தரணி நாகலிங்கம் விஸ்ணுகாந்தன் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X