Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
கார்கில்ஸ் நிறுவனத்தின் கீழ் பயணிக்கும் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கார்கில்ஸ் பூட்சிற்றியினால், புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற 88 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கார்கில்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் கார்கில்ஸ் பூட்சிற்றியில் நேற்று (04) காலை 8.30 மணியளவில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
“கார்கில்ஸ் சாருபிமா உழவர் சமூக நன்மை மற்றும் உதவித் தொகை” வழங்கல் எனும் திட்டத்தின் கீழ், வடமாகாணத்தில் உள்ள விவசாய குடும்பங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இந்த உதவித்திட்டம் வழங்கப்படுகின்றது.
கார்கில்ஸ் பூட்சிற்றியின் “வளம் மிக்க” எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கார்கில்ஸ் பூட்சிற்றியின் முகாமையாளர் ரஞ்சித் பி.ஜே தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
கடந்த 2018, 2019ஆம் ஆண்டுகளில், புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த சித்தி எய்தி, பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கும், பாடசாலை உபகரணங்கள், கல்வி ஊக்குவிப்புத் தொகை, மடிக்கணினிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
15 May 2025