2025 மே 14, புதன்கிழமை

மாணவிகளின் அலைபேசிகள் திருட்டு: நான்கு ​பேர் சிக்கினர்

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகளைத் திருடிய குற்றச்சாட்டில், நான்கு ​பேரை, யாழ்ப்பாணம், இன்று (12) கைதுசெய்துள்ளனர்.

கடந்த வாரம், பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகள் திருடப்பட்டதாக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இன்று (12), நல்லூர் வீதியில் வைத்து 2 சந்தேகநபர்களை, பொலிஸார் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, நகரப் பகுதியில் உள்ள அலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .