Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
மாதகல் பகுதியில், தனியார் காணியொன்றில் நில அளவைத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நில அளவீட்டுப் பணி, பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
மாதகல் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை, அளவிடுவதற்கு, இன்றுக் காலை நில அளவைத் திணைக்களத்தினர் அப்பகுதிக்கு வருகை தந்தனர்.
இந்தக் காணியை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு முயன்று வரும் நிலையில், நில அளவைத் திணைக்களத்தினர், நேற்று அப்பகுதிக்கு விரைந்து, அக்காணியை அளவிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன்போது, அப்பகுதியில் ஒன்றுகூடிய மக்கள், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
போராட்டத்தின் போது ஏராளமான பொலிஸாரும் கடற்படையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றிய பொலிஸார், அந்தக் காணி உரிமையாளரை அழைத்து பேசியிருந்தனர். இதையடுத்து, காணி உரிமையாளரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கனகரட்னம் சுகாஷூம், கடற்படையினருடன் பொலிஸாருடனும் பேசியிருந்தனர்.
இதன்போது, காணியை வழங்குவதற்கு காணி உரிமையாளர்கள் மறுத்ததையடுத்து, நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து வெளியயேறியிருந்தனர்.
இதேவேளை, காணி உரிமையாளர்களுடன் கடற்படையினரும் பொலிஸாரும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, ஊடகவியியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago