2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மாநகரசபையின் அமர்வுகளில் செய்தி சேகரிக்க கட்டுப்பாடு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 03 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு மேயரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

யாழ் மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர மேயரிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ் மாநகசபை வளாகத்தில் மாநகர செயலாளரின் ஒப்பத்துடன் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தலில் யாழ் மாநகரசபையின் மாதாந்த பொதுக் கூட்ட, விசேட கூட்ட அமர்வுகளின்போது கௌரவ முதல்வர், கௌரவ பிரதி முதல்வர், கௌரவ உறுப்பினர்கள், மாநகரசபை அமர்வுகளுடன் தொடர்புடைய மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர்ந்த வேறு எவரும் மாநகர சபா மண்டபத்தினுள் உள்நுளைவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X