Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 22 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
மாவீரர் நாளுக்கான தடை என்பது, எமது தமிழ் மக்களிடையே ஒரு வலுவான தமிழ்த் தேசியப் பற்றுதலை உண்டுபண்ணுவதுடன், தமிழர்களை எழுச்சி கொண்டு கிளர்ந்து எழச் செய்யும் செயற்பாடாகுமென, வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் ரவிகரனுக்கு மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பிறப்பிக்கப்பட்டுள்ள தடைக்கட்டளையை, முல்லைத்தீவு போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று (21) ரவிகரன் இல்லத்துக்குச் சென்று கையளித்தனர்.
மேற்படி தடைக்கட்டளையைப் பெற்றுக்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மாவீரர் நாளுக்கான தடை விதிக்கப்படவில்லை. அதற்கு முன்னரும் தடைகள் விதிக்கப்படவில்லை.
“இந்த நிலையில், தொடர்ச்சியாக நாங்கள் எங்களுடைய விதைக்கப்பட்ட உறவுகளை எண்ணி கண்ணீர் சிந்தி, அஞ்சலிக்கும் இந்த மாவீரர் நாளை தற்போதைய அரசாங்கம் தடைசெய்துள்ளது. இந்த அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்வது பொருத்தமானதல்ல.
“மாவீரர் நாளுக்கான தடை என்பது, எமது தமிழ் மக்களிடையே ஒரு வலுவான தமிழ்த் தேசியப் பற்றுதலை உண்டுபண்ணுவதுடன், தமிழர்களை எழுச்சி கொண்டு கிளர்ந்து எழச் செய்யும் ஒரு செயற்பாடாகப் பார்க்கின்றேன்” என்றார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
2 hours ago
3 hours ago