2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மின்காற்றலை அமைப்பதற்கு எதிராக மறவன்புலவு மக்கள் போராட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.குகன், எஸ்.நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் - மறவன்புலவு பகுதியில், மக்கள் குடியேற்றத்துக்கு அண்மையில் மின்காற்றாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால், வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்துக்கு முன்னால், இன்று (18) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், நேற்று (18) வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு நடைபெற்ற் நிலையிலேயே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதன்​போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், போராட்டக்காரர்கள் 5 பேருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு போராட்டம் நடைபெறும் இடத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் ​செயலாளரையும் சாவகச்சேரி பிரதேச செயலாளரையும் உடனடியாக வருகை தருமாறும் உத்தரவிட்டார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X