2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மீனவரைத் தனிமைப்படுத்த நடவடிக்கை

Niroshini   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

பலாலி வடக்கு - அன்டனிபுரம் பகுதியில் இருந்து, செவ்வாய்க்கிழமை (06) மீன்பிடிக்கச் சென்ற ஒருவர், பல மணி நேரமாக கரை திரும்பாத காரணத்தால், அவர் கரை திரும்பிய நிலையில் அவரைத் தனிமைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை, பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.

மேற்படி நபர் இந்தியாவின் எல்லை வரை சென்றுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இவர், நேற்று (07) மாலையே கரை திரும்பியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சட்டவிரோத செயற்பாடொன்றை மேற்கொள்வதற்காக சென்றிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, எரிபொருள் தீர்ந்த நிலையிலேயே தான் மீண்டும் கரை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாக, மீனவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .