2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

 

இந்தியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர்கள் 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலார்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில், நாளை (23) காலை, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

முன்னதாக, இன்றுக் காலை, யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சம்மேளனத்தில் இருந்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை பேரணி முன்னெடுக்கப்படும்.

அதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்குச் செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்கள், தூதரகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்புப் போராட்ட​த்தை முன்னெடுக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X