2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மீள்குடியேற்ற பகுதிகளுக்கு பஸ் சேவை ஆரம்பம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன் 

யாழ்ப்பாணம் - அச்சுவேலி தனியார் பஸ் சேவையை, நாளை மறுதினம்(02) முதல் மீள்குடியேற்ற பகுதிகளுக்கும் விஸ்தரிக்கவுள்ளதாக, வலி கிழக்கு தனியார் பஸ்சேவைகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,   “யுத்த காலத்துக்கு முன்னர், வலி கிழக்கு பகுதிகளூடாகவும் பஸ் சேவைகள் இடம்பெற்றது. எனினும், பின்னர் அப்பகுதிகள் உயர் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டப் பின்னர் அப்பகுதிக்கான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது அப்பகுதிக்கான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 

“இதன்படி, அச்சுவேலி - யாழ்ப்பாண சேவையானது, அச்சுவேலி பஸ் நிலையத்தில் இருந்து சந்நிதி வீதியூடாக, காற்றாட்டி சந்தியூடாக, வளலாய் வடக்கு பாம்வீச் சந்தி சென்று, அங்கிருந்து வளலாய் பிள்ளையார் கோவிலடி ஊடாக, தம்பாலை சந்தியூடாக, இடம்பெறவுள்ளது.   “இதேபோன்று அச்சுவேலியில் இருந்து ஒட்டகப்புலம் ஊடாக, மக்கோனா பாடசாலை ஊடாக, சுதந்திரபுரம் சந்தியூடாக, வசாவிளான் பாடசாலை வரைக்கும், மூளாய்க்கான பாதை (773) தற்காலிகமாக மேற்குறித்த எல்லை வரைக்கும் சேவை இடம்பெறவுள்ளது” என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X