2025 மே 03, சனிக்கிழமை

’முடிவுகளை கூற முன்னர் ஆற்றுப்படுத்த வேண்டும்’

Niroshini   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

கொரோனா ஆய்வுகூட முடிவுகள் கூறுவதற்கு முன்னர், தனிமனித ஆற்றுப்படுத்தலும் குடும்ப ஆற்றுப்படுத்தலும் வழங்கப்படல் வேண்டுமென்று, வைத்தியர் சி. யமுனாநந்தா வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், கொரோனாத் தொற்று சமூக மட்டத்தில் பரவும்போது கண்டறியப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 30 சதவீதத்தினர் நோய் அறிகுறியற்றவர்களாகக் காணப்படுவரெனவும் ஒருவரின் உடலில் நோய்க்கிருமித் தொற்று இருப்பின் மூன்று கிழமைவரை ஏனையவர்களுக்குத் தொற்ற வாய்ப்புள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக நோய் அறிகுறிஇ தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாமெனத் தெரிவித்துள்ள அவர்,

சமூகத்தில் எழுந்தமானமாக யாரிடமும் பரிசோதனை மேற்கொள்ள முன்னர், அந்நபரிடமிருந்து எழுத்துமூல அனுமதி பெறப்படல் வேண்டுஅமெனவும் கூறினார்.

மேலும், கொரோனா ஆய்வுகூட முடிவுகள் கூறுவதற்குமுன் தனிமனித ஆற்றுப்படுத்தலும் குடும்ப ஆற்றுப்படுத்தலும் வழங்கப்படல் வேண்டுமெனத் தெரிவித்த அவர்,

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் மனித உரிமை அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முன்னுரிமை அளிக்குமெனவும் கூறியுள்ளார்.

'நோயாளி தொடர்பான தகவல்களை விளம்பரப்படுத்தல் தவறானது. மாறாக இராணுவ எதேச்சாதிகார ரீதியிலான கோரோனாக் கட்டுப்பாடு வெறும் புள்ளிவிவரங்களுடன் மட்டும் நிற்கும். எனவே, நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலேயே கொரோனாத் தடுப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றோம்' எனவும், யமுனாநந்தா கூறியுள்ளார்.

ஆற்றுநீரின் வெள்ளத்தை அளவிடுவது போன்றே கொரோனா தொற்றின் அளவைக் கண்டறியும் பரிசோதனை முடிவுகள் ஆகுமெனத் தெரிவித்துள்ள அவர், ஆறு பெருக்கெடுத்து ஓடும்போது அதன் வெள்ளத்தை அளவிடுவது மடமையாகுமெனவும் மாறாக வெள்ளத்தை தடுத்தல்இ வெள்ளப் பாதிப்பைக் குறைத்தல் என்பனவே செய்தல் அவசியமாகுமெனவும் கூறியுள்ளார்.

கொரோனா நோய்க்கான பிரத்தியேகச் சிகிச்சை இல்லாத சூழலில், ஒருவரைக் கட்டாயப்படுத்தி கொரோனா நோய் பரிசோதனைக்கு உட்படுத்துவது, மனித உரிமை ரீதியில் சரியானதல்ல எனவும், அவ்விறிக்கையில், தெரிவிக்க்பபட்டுள்ளது.

அத்தடன், இறந்த கொரோனா வைரஸ் தொற்றுடையவரின் உடலை புதைத்தல், உயிருள்ள கோரோனா தொற்று நோயாளரை நடமாடலைவிட ஆபத்தானதல்ல எனத் தெரிவித்துள்ள அவர், காசநோய்க் கட்டுப்பாட்டுக்கான சமூக அணுகல் கொரோனா வைரஸ் நோய்க் கட்டுப்பாட்டிலும் பயன்படுமெனவும் காசநோய் ஒருவரில் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட கொரோனா வைரஸ் தொற்று ஒருவரில் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் குறைவு எனவும் கூறியுள்ளார்.

மேலும், அதிகாரிகள் கொரோனா பரவலைச் சாதகமாக வைத்து, மக்களின் சமூக விழுமியங்களை மிதிக்க முற்படுவதும், மக்களை அடக்க முயல்வதும் தவறானது எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X