2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மூதாட்டி கொலை : ஐவர் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில், தனிமையிலிருந்த மூதாட்டியை அடித்து கொலை செய்து, நகைகளை அபகரித்த சம்பவம் தொடர்பில், 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான ஐவரும் யாழ்.ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், 22 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

தனிமையில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை (21) இரவு புகுந்த கொள்ளையர்கள் அவரை தாக்கி கொலை செய்து விட்டு, அணிந்திருந்த நகைகளை அபகரித்து சென்றிருந்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X