2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மூதாட்டியை தாக்கிக் கொள்ளை

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரின் வீட்டு கூரையை பிரித்து நேற்று (19) அதிகாலை உட்புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று மூதாட்டியை தாக்கி, அவரின் முகத்தை துணியால் கட்டி அவரை அங்கிருந்த கதிரை ஒன்றில் கட்டி வைத்து விட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி, தோடு என்பவற்றை அபகரித்ததுடன், வீட்டினுள் தேடுதல் நடத்தி வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 3 கையடக்க தொலைபேசி என்பவற்றையும் கொள்ளையிட்டு தப்பி சென்று உள்ளனர்.

மூதாட்டியின் அவல குரல் கேட்டு அயலவர்கள் சென்று மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சண்முகநாதன் நித்தியலட்சுமி (வயது 70) என்பவரே காயமடைந்தார். அதேவேளை தனக்கு 17 வயதிருக்கும் போது தந்தை தோடுகளை வாங்கி தந்ததாகவும், தாய் சங்கிலியை வாங்கி தந்ததாகவும், அவற்றையே இதுவரை காலம் அணிந்து இருந்த போது அவற்றை கொள்ளையர்கள் அபகரித்து சென்று விட்டனர் என கண்ணீர் மல்க சாவகச்சேரி பொலிஸரிடம் முறையிட்டு உள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X