2025 மே 01, வியாழக்கிழமை

’மேலதிக திட்டங்கள் முன்னெடுக்கப்படும்’

Niroshini   / 2021 ஜனவரி 03 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வடமாகாணத்தில், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமென்று, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்தார்.

அத்துடன், கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில், வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய மேலதிகமான சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், உலக நியதிக்கு இணங்க, வடக்கு பகுதியிலும், கொரோனா  வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்குரிய கட்டுப்பாடுகள், நடைமுறைகளை பின்பற்றி பொது மக்களைச் செயற்படுத்துவதற்கு, பொலிஸார்  பூரண ஒத்துழைப்பை வழங்குவார்களென்றார்.

பொதுமக்களை நல்வழிப்படுத்தி குற்றச்செயல்களை தடுத்து வடக்கு மாகாணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதே தமது நோக்கமாக காணப்படுகின்றதெனத் தெரிவித்த அவர், அத்துடன் வடக்கு மாகாணத்தில் தற்போது இடம்பெறுகின்ற சில கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவதற்குரிய வேலைத்திட்டங்களை, முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

அதேபோல, சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொதுமக்கள் ஏதாவது தகவல்கள் அறிந்திருந்து, அதனை தெரியப்படுத்தினால், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .