2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

’மேலும் பல பிரிவுகளுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை’

Niroshini   / 2021 ஜூன் 03 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளுக்கு, கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,  வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் எஸ். காண்டிபன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1,0000 பேருக்கு சினோஃபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிதத்hர்.

ஆயினும் இந்த எண்ணிக்கை, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளின் பல இடங்களில் ஏறத்தாழ அதிகமான இடங்களில் 50 சதவீதமானோர் மட்டுமே தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் டினவும் அவர் கூறினார்.

'யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இனங்காணப்படுகின்ற தொற்றாளர்களின் எண்ணிக்கை சனத்தொகை விகிதாசாரத்தில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது கணிசமாக கூடுதலான எண்ணிக்கையாகும். அதுவே தடுப்பூசி வழங்கலில் யாழ்ப்பாணத்துக்கு முன்னுரிமை வழக்கப்பட்டதற்கான காரணமாகும்' என்றும். அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .