Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜூன் 05 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
“யாழ். மாவட்ட குடிநீர் போத்தல் விநியோகஸ்தர் உரிமம் தருகிறோம்” என, கூறி பலரிடம் பணத்தை அபகரித்த இருவர், நல்லூரில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து, பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்ந்தவர்கள், தமது தயாரிப்பை யாழ். மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாகக் கூறி, யாழ். மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.
அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு குடிநீர் போத்தல்கள் வழங்கப்படாததுடன் சிலருக்கு வழங்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை என கூறி நுகர்வோர் அதிகாரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள், அண்மையில் ஒன்று கூடி ஆலோசித்துள்ளனர்.
அதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களை யாழ். நல்லூரில் உள்ள விடுதிக்கு அழைத்து, புதிதாக ஒருவருக்கு வியோகஸ்த்தர் உரிமம் பெறுவது போல் பாவனை செய்து, நிறுவனத்தின் முக்கியஸ்தர் இருவரை மடக்கி பிடித்துள்ளனர்.
நேற்று மாலை 7 மணிக்கு குறித்த நிறுவனத்தை சார்ந்தவர்களை மடக்கி பிடித்த பாதிக்கப்பட்டவர்கள், அவர்களை நையப்புடைத்ததன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டிலிருந்து, மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தியமைக்கான சான்றுகள் மற்றும் வழங்கப்பட்ட தண்ணீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் அனைத்தையும் வைத்தியுள்ளனர்.
அதேபோல், யாழ். மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 தொடக்கம் 4 கோடி ரூபாய் பணத்தை மேற்படி தண்ணீர் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
12 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago