2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யானைகளைக் கட்டுப்படுத்த மின்வேலிகள்

Gavitha   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில்,  யானைகளின் தொல்லைகள் காணப்படும் கிராமங்களுக்கு மின் வேலியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணுக்காய் பிரதேச செயலாளர் சிவபாலன் குணபாலன் ஞாயிற்றுக்கிழமை (14) தெரிவித்தார்.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் யானைகளின் தொல்லை கூடுதலாகக் காணப்படும் புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம் கிராம மக்களுக்கு முதற்கட்டமாக யானை வெடிகள் வழங்கப்பட்டுள்ளன.

யானைகள் யானைவெடிகளுக்கு கட்டுப்படுவதில்லையென்ற கிராமங்களின் மக்களின் முறைப்பாட்டையடுத்து, இடர்முகாமைத்துவ அமைச்சினால் மின்வேலிகளை அமைப்பதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X