2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

யாழுக்கு சந்திரிகா விஜயம்

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

யாழ்ப்பாணத்துக்கு இன்று (25) வருகைதரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நான்கு பிரதேச செயலகங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ளார்.

ஐனாதிபதி தேசிய ஒருமைப்பாட்டுக்கும்; நல்லிணக்கத்துக்குமான பணியகத்தினால் தெல்லிப்பளை சங்கானை கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களின் ஊடாக நடமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காகவே, அவர் இங்கு வருகைதருகின்றார்.

வருகைதரும் அவர் தெல்லிப்பழை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பளை வீமன்காமம் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைக்கவுள்ளார். மேலும். தெல்லிப்பழை கிழக்கில் அமையவிருக்கும் மாம்பழக் கிராமம் தொடர்பிலான நிகழ்விலும் அவர் பங்குகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வுகளை முடித்துக் கொண்டு சங்காணை பகுதிக்குச் செல்லும் அவர், அங்கும் பல திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மேலும், கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் செல்லும் அவர், நீர் வழங்கும் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

குறிப்பாக உடுப்பிட்டிப் பகுதியில் நீர் தாங்கி, பொலிகண்டியில் கிராமிய சுகாதார நிலையம் மற்றும் கிராமத்துக்கான நிர் விநியோகம், பருத்தித்துறையில் சூரிய மின்பிறப்பாக்கி (சோலர்) திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X