2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ். - கொழும்பு ரயில் சேவையில் மாற்றம்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணிகளின் நலன் கருதி யாழ்.  கொழும்பு ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென தான் முன்வைத்திருந்த கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றியமைக்காக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இலங்கை புகையிரதத் திணைக்களப் பொது முகாமையாளருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,மக்கள் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் யாழ்ப்பாணத்திலிருந்து அதிகாலை வேளையில், குறுகிய நேர வித்தியாசத்தில் இரு ரயில்கள் கொழும்புக்கான சேவையில் ஈடுபட்டு வந்தன. இதனால் பயணிகளுக்கான பயன்பாடு அதிகளவில் இல்லாதிருந்த நிலையில், இதில் ஒரு ரயில் சேவையை சில மணி நேரம் தாமதித்து ஆரம்பிக்கும்படி பயணிகள் முன்வைத்திருந்த கோரிக்கையை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,போக்குவரத்து அமைச்சர் மற்றும் இலங்கை புகையிரதத் திணைக்களப் பொது முகாமையாளர் ஆகியோரிடம் வலியுறுத்தியிருந்தார்.

செயலாளர் நாயகம், முன்வைத்திருந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்த கால அவகாசம் கோரப்பட்டிருந்த நிலையில்,  எதிர்வரும் 05ஆம் திகதி முதல் மேற்படி சேவை நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X