2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

யாழ்.கடற்றொழில் திணைக்களத்துக்கு புதிய கட்டடம் அமைக்கப்படும்

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.கடற்றொழில் திணைக்களத்துக்கு, புதிய கட்டடம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான கட்டுமானப் பணிகள், எதிர்வரும் 2017ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த சமரவீர யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள், புதன்கிழமை (21) கடற்றொழில் அமைச்சர் மஹிந்த சமரவீரவை, கொழும்பில் சந்தித்து தமக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்போது, யாழ்.கடற்றொழில் திணைக்களத்துக்கென, புதிய கட்டடமொன்றை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்துள்ள அவர்,
'மண்ணெண்ணெய், மானிய வலைகள் சிலருக்கு கொடுக்கப்படாமல் உள்ளமைக்கான காரணம் தற்போது அவர்கள் உயிருடன் இல்லை, அல்லது வெளிநாடு சென்றுள்ளமை ஆகும். உரித்தாளிகளுக்கு வழங்குவது தொடர்பில் கடற்றொழில் பணிப்பாளர் சுற்று நிரூபங்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.கடற்றொழில் திணைக்களத்துக்கு புதிய வாகனம் வழங்குவதற்கு கவனம் செலுத்தி வருகின்றோம்.

குருநகர் மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி வேலைகள் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும். 28 அடி உள்ளக இயந்திரப் படகுகள் பதியப்படாமல் உள்ளது. உரிய பத்திரங்கள் தவறவிடப்பட்டிருந்தால் சத்திய கடதாசி ஒன்று தயாரித்து பதிய முடியும்.

கடற்றொழில் பரிசோதகர் பற்றாக்குறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதி காண் விஞ்ஞானப் பட்டதாரிகள் கிடைக்காமல் இருப்பதால் பதவிகளுக்கு நியமனம் செய்ய முடியவில்லை. எனினும், அதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் தெரிவித்தார்.

அத்துடன் சிறகு வலை சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பின் பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X