2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் கைகலப்பு: மூவர் காயம்

Administrator   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாண பல்கலைகழக வணிகபீட பெரும்பான்மை இன இரு மாணவ குழுக்களுக்கு இடையில் நேற்று வியாழக்கிழமை (11)  ஏற்பட்ட கைகலப்பில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

2 ஆம் வருட வணிகபீட மாணவர்களின் வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்த 3ஆம் பீட மாணவர்கள் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் மூன்று மாணவர்கள் அடிகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X