2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலையில் விகாரை வேண்டும்

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில், விகாரை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌத்த மாணவர் ஒன்றியம், இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளது.

யுத்தகாலத்துக்கு முன்னர் யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் தமிழ் மாணவர்களே படித்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து, தற்போது, குறிப்பிடத்தக்களவு சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், அவர்கள், தங்கள் சார்பில் ஒன்றியங்களை உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு ஒன்றியமே தங்களுக்கு விகாரை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X