2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். மாநகர ஊழியர்கள் பணி முடக்கம்

George   / 2016 நவம்பர் 15 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்காலிக பணியில் உள்ள சுகாதார ஊழியர்கள், தமக்கு நிரந்தர நியமனம் தரவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், நேற்ற செவ்வாய்க்கிழமை (15) பணி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 7ஆம் திகதி முதல், 1 வாரமாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்துக்கு தீர்வுக் கிடைக்காத நிலையில், சுகாதார ஊழியர்கள் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (15) யாழ். மாநகர சபை வாயிலை இடைமறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சுகாதார ஊழியர்களின் இப்போராட்டத்தால் யாழ். நகரின் கழிவகற்றல் பொறிமுறை ஸ்தம்பித்துள்ளது. யாழ். நகரம் முழுவதும் கழிவுகளால் நிரம்பி காணப்படுகின்றது. எனினும், இதுவரை சுகாதார ஊழியர்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பணி முடக்க போராட்டத்தினால் யாழ். பொது நூலகம், சிறுவர் முன்பள்ளிகள் என்பன மூடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X