2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவை

George   / 2017 மார்ச் 31 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை வழங்கப்பட்து நேற்றைய தினமே” என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் இருவரை கொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நீதிபதி தெரிவிக்கையில், “யாழ். குடாநாட்டையே பதட்டத்திற்கு உள்ளாக்கிய படுகொலை தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு இரண்டரை வருட கால பகுதிக்குள் தீர்ப்பும் அளிக்கப்பட்டு உள்ளது.

யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் இவ்வாறு பாரிய தண்டனை வழங்கி இன்றைய தினமே (நேற்று) தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .