Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, சேவையின் நிமித்தம் கொழும்பு இராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிணங்க, யாழ். மாவட்டத்துக்கான புதிய கட்டளைத் தளபதியாக, இராணுவத் தலைமையக இராணுவ செயலாளராக கடமையாற்றும், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் கிளிநொச்சி, முல்லைதீவு, வன்னி பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தின் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, கடந்த 2015ஆம் பெப்ரவரி மாதத்திலிருந்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கடமையாற்றினார்.
மேலும், வன்னி இறுதியுத்தத்தின் போது, 59ஆவது படைப்பிரின் கவச எதிர்ப்பு பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியாகவும் விளங்கினார்.
இவர் கடமையாற்றிய காலப்பகுதியில், பொதுமக்களின் பூர்வீக இடங்களில் இருந்து இராணுவத்தை குறைத்து, உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உள்ளடங்கியிருந்த காணிகளை விடுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கான பிரியாவிடை நிகழ்வுகள், புதன்கிழமை (20) பலாலி இராணுவத் தலைமையகம் மற்றும் காங்கேசன்துறை தலசெவன விடுதியில் இடம்பெற்றன.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago