2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்டச் செயலகம் முற்றுகை

George   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமையை கண்டித்து, பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (24) காலை மாவட்டச் செயலகத்தின் முன்னால் திரண்ட மாணவர்கள், யாழ். மாவட்டச் செயலகத்தின் இரு வாயில்களையும் மறித்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களை உட்செல்லவிடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணையை வலியுறுத்தியே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களை சுட்டுப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜரப்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன், விடுத்த உத்தரவையடுத்து, அவர்கள் இன்று ஆஜரப்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில், யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X