2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்டத்தில் 138 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 138.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இக்காலநிலை இன்னும் மூன்று தினங்களுக்கு தொடரும் எனவும் திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன், திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.

நாட்டில் பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில், பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகிறது. கடந்த 20ஆம் திகதி காலை 8.30 மணியில் இருந்து 21ஆம் திகதி காலை 8.30 மணிக்கு உட்பட்ட 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சியின் அளவு 138.3 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளது.

கடந்த 19ஆம் திகதி காலை 8.30 மணியில் இருந்து 20ஆம் திகதி காலை 8.30 மணிவரைக்கும் 97.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது. கடந்த 12ஆம் திகதியில் இருந்து இன்று வரைக்கும் 328.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X