2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். முஸ்லிம்களின் ஒன்று கூடல்

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், யாழ். முஸ்லிம் சிவில் சமூகத்துடன் இணைந்து நடத்தும் யாழ். முஸ்லிம்களின் ஒன்றுகூடல,; எதிர்வரும் சனி (05) ஞாயிறு (06) ஆகிய இரு தினங்களில் யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியிலும், ஜின்னா மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் அஞ்சல் விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் கலந்து கொள்ளவுள்ளார்.

சனிக்கிழமை (05) மாணவர் போட்டி, பெண்களுக்கான போட்டி, கிரிக்கெட், உதைபந்தாட்டப் போட்டிகள் இடம்பெறும்.

ஞாயிற்றுக்கிழமை (06) மரதன், சைக்கிளோட்டம், பெண்களின் மேடை நிகழ்வு, விசேட உணவுக்கண்காட்சியும் இடம்பெறுவதுடன் மாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், ஆசிரியர்கள் கௌரவிப்பு, பரிசளிப்பு நிகழ்வு, பிரமுகர்கள் உரையுடன் ஏற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.

சிறுவர் இராஐhங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஐh, எம்.எச்.எம்.நவவி, எம்.எச்.எம்.சல்மான், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், ச.சரவணபவன், அங்கஐன் இராமநாதன் ஆகியோர்களும், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்க்கட்சித்தலைவர், சி.தவராசா, மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X