2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறுக் கோரி, அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (02) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்து, கடந்த திங்கட்கிழமை (29) வவுனியா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட, முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகனின் விடுதலைக்காக செயற்பட்ட அமைப்பு, இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, 'உயிரை அடகு வைத்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலைபேசாதே', 'நாட்டில் நல்லாட்சி, நாம் வீதியில் கண்ணீரும், கம்பலையுமாய், நீதி தேவதையே கண் திற' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், முருகையா கோமகன் கலந்துகொண்டு, அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X