Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் மற்றும் வேறு காரணங்களால் காயமடைந்து, உடலில் தழும்புகள் உள்ளவர்களுக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 8, 9, 10 ஆம் திகதிகளில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக, வைத்திய கலாநிதி அமுதா கோபாலன் தெரிவித்தார்.
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மனிதநேய சேவை செயற்பாட்டின் கீழ் இது மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்காக அமெரிக்காவின் 4 பிளாஸ்ரிக் வைத்திய நிபுணர்கள், உதவியாளர்கள் உட்பட 16 பேர் வருகை தரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெரும்பாலும், இளைஞர், யுவதிகள் தழும்புகள் மாறாத நிலையில், திருமண மற்றும் சமூக வாழ்க்கைக்கு முகங்கொடுக்க முடியாமல் கஷ்டத்துடன் வாழ்கின்றனர். இன்னும் சிலர் வெளியில் நடமாடுவதற்கும் தயங்குகின்றனர். இவர்களைக் கருத்திற்கொண்டு இந்த இலவச சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளது.
தெல்லிப்பழை வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய சத்திரசிகிச்சைக் கூடம் உள்ளதால், அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. முதலில் சிகிச்சைபெற வேண்டியவர்கள் இனங்காணப்பட்டு, அதன்பின்னரே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும். இதில் நாட்டில் அனைத்து இடங்களைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றலாம் என அவர் தெரிவித்தார்.
சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னர் சில அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளமையால், சிகிச்சை பெற விரும்புபவர்கள் அதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்டவர்கள் 0718186185 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு, சிகிச்சைக்கான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
52 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
7 hours ago