2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழில் காணாமற்போன புறாக்கள் மன்னாரில் மீட்பு

Menaka Mookandi   / 2016 மார்ச் 01 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து திருடப்பட்ட 60 புறாக்களில் 18 புறாக்கள், மன்னார் - பள்ளிமுனை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து திங்கட்கிழமை (29)  மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.

புறாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், அவற்றின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், ஏற்கனவே இருவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் பிரகாரம் புறாக்கள் மீட்கப்பட்டன.

திருடப்பட்ட 60 புறாக்களும் சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X