2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

யாழில் 8 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 25 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், இராசபாத வீதியில் நேற்று வியாழக்கிழமை (24) இரவு பொலிஸ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 8 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கஞ்சாவைக் கொண்டு சென்றவர் தப்பியோடியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா கடத்தப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இராசபாத வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தான் வைத்திருந்த பொதியை கீழே எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு தப்பித்துச் சென்றுள்ளார். பொலிஸார், பொதியை எடுத்துச் சோதனை செய்த போது, அதில் 8 கிலோகிராம் கஞ்சா இருந்துள்ளது.

தப்பிச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தைக் குறித்து எடுத்துக்கொண்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X