Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஒக்டோபர் 24ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய பொலித்தீன், பிளாஸ்டிக், இலத்திரனியல் - மின்சாதனக் கழிவு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கழிவு ஒழிப்பு வாரத்தின், யாழ். மாவட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று நடைபெற்றது.
வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கலந்துக்கொண்டு, கழிவுகளைச் சேகரிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
“யாழ். மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், இக்கழிவுகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள சேமிப்பு நிலையத்திலும், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் கையளிக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாணப் பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீப், உதவிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார், யாழ். மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோருடன் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துக் கொண்டிருந்தார்கள்.
52 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
7 hours ago